• Breaking News

    பழனி முருகன் கோவிலில் வரிசையில் நின்ற பாஜக நிர்வாகி உயிரிழப்பு

     


    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் சமீபத்தில் பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோன்று ராமநாத சுவாமி கோவிலிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

     தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் பழனி முருகன் கோவிலிலும் நடந்துள்ளது. அதாவது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்ற பகுதியில் செல்வமணி (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக கட்சியின் ஒன்றிய தலைவராக இருந்துள்ளார். இவர் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற நிலையில் பின்னர் மலையில் இருந்து திரும்பி வந்து அவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார்.

    இவர் மலையின் படிப்பாதை வழியாக கோவிலுக்கு சென்ற நிலையில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்து நின்றார். அப்போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்ட நிலையில் பழனியில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    No comments