• Breaking News

    மயிலாடுதுறை: புகழ்பெற்ற திருமண பிரார்த்தனை ஆலயமான திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி ஆலய மாசி திருவிழா கொடியேற்றம்


    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரியில் புகழ் பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயம், கல்யாணசுந்தரமூர்த்தி சுவாமிகள் கோகிலாம்பாள் அம்பிகையைஇங்கு திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.

     திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை இந்த ஆலயத்தில் மாசி மக பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 

    இதனை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் கோகிலாம்பாள் ஆலய கொடி மரத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து மந்திரங்கள் ஓத யாகம் வளர்க்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் மற்றும் பால் சந்தனம் உள்ளிட்ட தீர்த்தங்களால் ஆலய கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மகா தீபாரதனை க்கு பிறகு ஆலய கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

     விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா 16ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவில் இந்து அறநிலையத்துறை மயிலாடு துறை இணை ஆணையர் மாரிமுத்து செயல் அலுவலர் நிர்மலா தேவி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    No comments