• Breaking News

    அரசு கேபிளில் ஆபாச படம் ஒளிபரப்பு..... சேனல் பார்த்தோர் அதிர்ச்சி

     


    கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி துவங்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட, அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிகப்படியான சேனல்கள் வழங்கப்பட்டன.

     தொடர்ந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அரசு கேபிள் டிவியின் தரம் குறைக்கப்பட்டு, முடக்கப்படும் சூழல் உள்ளது.இந்நிலையில், நேற்று மதியம் தர்மபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் ஆபாசப்படம் ஒளிபரப்பானது. சேனலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தர்மபுரி அரசு கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில், ''ஆபாசப்படம் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. இது குறித்து தகவல் தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும், தனியார் சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

    No comments