• Breaking News

    தண்டவாளத்தில் விழுந்த பாறை..... உதகையில் மலை ரயில் சேவை ரத்து

     


    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. குறிப்பாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி பகுதிகளில் கன மழை பெய்தது. கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் குன்னூர் மலை ரயில் பாதையில் கல்லாறு பகுதியில் தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்தது.ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் பாறை விழுந்ததை கண்டு தகவல் அளித்தனர்.

     இதனையடுத்து மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பாறையை அகற்றி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    No comments