ஜெனிசிஸ் உடற்பயிற்சி கூடம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது..... அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவருக்கு பரிசுகளை வழங்கினார்கள்.....
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தீபன் திருமண மண்டபத்தில் ஜெனிசிஸ் உடற்பயிற்சி கூடம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது இதில் திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ,திருவண்ணாமலை ஆகிய மாவட்டச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் மூன்று தரப்பினராக சுமார் 250 பேர் கலந்துகொண்டனர்.
ஆணழகன் போட்டி பரிசளிப்பு விழாவில் உடற்பயிற்சியாளர் K.மோகன் ஏற்பாட்டில் நடந்த விழாவில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் ஆகியோர் கலந்துகொண்டு ஆணழகன் போட்டியில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த வர்களுக்கு பரிசு சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில் தொழிலதிபர்கள் V.Pபொன்னன், G.V.Nகுமார், C.விக்னேஷ் மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர் .
No comments