பிரபல நடிகை ஜோதிகா கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலிவுட் சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவர் ஹிந்தியில் நடிக்கவில்லை. இவர் தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு நடித்த வாலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகையாக ஜொலித்தார். இவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து பல வருடங்கள் விலகி இருந்த நிலையில் மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஜோதிகா, “பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வெற்றியைப் பெற்ற பல மோசமான கமர்சியல் படங்களை நான் பார்த்திருக்கிறேன். அந்த திரைப்படங்கள் எல்லாம் பெரிய மனதுடன் விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால் என்னுடைய கணவர் திரைப்படங்களை பொறுத்தவரை கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக நான் உணர்கிறேன். படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில மோசமான படங்களை விட கடுமையான விமர்சனங்களை சந்தித்ததை பார்த்தபோது அது என்னை பாதித்தது. ஊடகங்கள் இதை அறிந்து கொள்ளாததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” . என்று கூறியுள்ளார்.
0 Comments