• Breaking News

    பம்மல் வடக்கு பகுதி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது


    திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக பம்மல் வடக்கு பகுதி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் பகுதி கழகச் செயலாளர் திருநீர்மலை த.ஜெயக்குமார் ஏற்பாட்டில்  நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் க.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு மாபெரும் மருத்துவ முகாமை துவங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் மாநகராட்சி இரா. நரேஷ் கண்ணா மாவட்ட கழகப் பிரதிநிதி எஸ்.கே.நெப்போலியன், 29 வது வட்ட கழக செயலாளர் ப.ஆண்டவன், வட்டக் கழக நிர்வாகிகள் பாலாஜி டி.எம். ஜோசப், அன்பழகன், மோகன், தமிழ் குமார்,இறுதியில் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் ஜி.கே.அரவிந்த்ராஜ், பம்மல் வடக்கு பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஞா.பிரபு நன்றி உரையாற்றினார்கள்.

    No comments