முடிச்சூர்: முதல்வர் முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய துணை செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது
முடிச்சூர் ஊராட்சி சார்பில் முதல்வர் முக.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூரில் உள்ள 6 கிளைகளிலும் ஒன்றிய துணை செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை பிறந்தநாள் விழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது.
முடிச்சூர் அண்ணாநகர் கிளையில் ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற துணை தலைவருமான விநாயகமூர்த்தி ஏற்பாட்டில் முதல்வர் பிறந்தநாள் விழாவில் புனிததோமையர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.கே.ரவி கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து 500 நபர்களுக்கு மரக்கன்றுகள் நடப்பட்டது.
முடிச்சூர் கிழக்கு கிளை சார்பில் நடந்த நிகழ்ச்சி கிளை துணை செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் கழக கொடியேற்றி 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.முடிச்சூர் இந்திராநகர் கிளை சார்பில் கிளை செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மரக்கன்று இனிப்புகள் வழங்கப்பட்டது.முடிச்சூர் மேற்கு கிளை சார்பில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுனில் மேத்யூ ஏற்பாட்டில் 3 இடங்களில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு கிளையிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது.முடிச்சூர் கொம்மியம்மன் நகர் கிளை சார்பில் கிளை செயலாளர் சுகுமார் ஏற்பாட்டில் கழக கொடியேற்றி 200 நபர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினர். முடிச்சூர் லட்சுமி கிளை சார்பில் கிளை செயலாளர் குமார் ஏற்பாட்டில் கழக கொடியெற்றி 500 நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.முடிச்சூர் பகுதியில் 6 கிளைகளிலும் பல்வேறு இடங்களில் திடாவிட மாடல் முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர் கந்தசாமி, ஒன்றிய பிரதிநிதி ஏ.முருகன், ஆர்.மணிவண்ணன், கிளை செயலாளர்கள் தினகரன் குமுதினி, புஸ்பாவாகினி, மாயஜோதி, சாலமன், வெங்கடஜாலு, இளஞசெழியன், மாஸ்டர் விஜய், ரவி, கருணாகரன், தில்லை, சிவலிங்கம், பிரவின், ஜெபா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments