கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். 8 நாட்கள் மட்டுமே அங்கு ஆய்வு பண்ணி நடைபெற திட்டமிட்டது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 9 மாதங்கள் சுனிதா வில்லியம்ஸ் விண்கலத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்டோரை அழைத்து வருவதற்காக சென்றது.அந்த விண்கலம் நேற்று காலை 10:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது.
டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹக் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். சுமார் 17 மணிநேர பயணத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடற்பகுதியில் கேப்சூல் வெற்றிகரமாக தரையிறங்கியது . சுனிதா வில்லியம் உள்ளிட்ட வீரர்கள் பத்திரமாக பூமியில் தரையிறங்கி விட்டனர்.
0 Comments