வரதராஜபுரத்தில் எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வரதராஜபுரத்தில் எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு தொடக்க விழா வெகு சிறப்பாக எஸ்.எஸ்.பி பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.பி பள்ளியில் நிறுவனத் தலைவர் ராஜா பக்கிரி சாமி தலைமை தாங்கினார், தலைமை ஆசிரியர் ஜி.பிரியா முன்னிலை வகித்தனர், துணை ஆசிரியர் பிரஜித்ரா சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக 1ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக நகைச்சுவை தென்றல் ஆர்.சண்முக வடிவேல், ஆடிட்டர் ராஜசேகரன், கார்டியல் பைனான்ஸ் டைரக்டர் எம்.கே. சந்திரசேகர், தலைமை ஆசிரியர் ஜி.பிரியா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடல் பாடல் நடனமாடி பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நகைச்சுவை தென்றல் ஆர்.சண்முகா வடிவேல் பேசுகையில் எஸ்.எஸ்.பி பள்ளியில் மாணவ மாணவிகள் அனுப்பி வைத்து பெற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் இந்த பள்ளியில் படித்தால் ஒழுக்கத்தையும் குணத்தையும் கற்றுக் கொள்ள முடியும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பெருமைப்பட வேண்டும் சிறந்த பள்ளிக் கூடமாக உருவாக்கப்பட இந்த பள்ளிக்கூடம் அனைத்தையும் உருவாக்கித் தந்த அவரைப் நிறுவன தலைவரை பாராட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
No comments