பம்மல் பசும்பொன் நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி யம்மன் ஆலயத்தில் மாசி மாத பெளர்ணமி தீமிதி திருவிழா நடைபெற்றது
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி யம்மன் ஆலயத்தில் 2 ஆம் ஆண்டு மாசிமாதம் பெளர்ணமி தீமிதி திருவிழா, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் வெகுவிமர்சியாக கொண்டாடபட்டது.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 9 ஆம் நாளன்று வல்லாளராஜாவை. அழித்து ஸ்ரீ காளி அம்மனாக வடிவம் கொண்டு தரை, தப்பட்டை முழங்க ஊர்வமாக சென்று பக்தர்களுக்கு ஆசிவழங்கி ஆலயம் வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து மாலை சூரியம்மன் ஆலயத்தில் இருந்து 500 க்கு மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி அலகு குத்தி அம்மனை தரிசித்து ஊர்வலமாக பம்மல் முக்கிய வீதி வழியாக சென்று முத்துமாரி யம்மன் ஆலயத்தில் வந்தடைந்து முத்து மாரியம்ம ன் அம்மனை. வணங்கி. தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதில் ஆலய நிர்வாகிகள் தர்மகத்தா மகேந்திரன், ஆலோசகர் கெஜேந்திரன் தலைவர் மருதவானன் துனைத் தலைவர் ரகுராமன்செயலாளர் ஜெகன் துனைச் செயலாளர் அகிலன் தீவன்ராஜ்பொருளாளர் முத்துக்குமரன் மற்றும் ஊர் பொதும்ககள் பக்தர் கோடிகள் ஏராளமானோர்.கலந்து கொண்டு முத்துமாரி யம்மனை வழிபட்டு சென்றனர்.
No comments