• Breaking News

    தேனி: கூடலூர் நகரக் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

     


    அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தேனி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்போது பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் இன்று கூடலூர் நகரக் கழகத்திற்கு உட்பட்ட 1 முதல் 10 வரை உள்ள வார்டுகளுக்கான புதிய கழக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு,அவர்கள் மூலமாக தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டி தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.

    கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும்,தேனி கிழக்கு மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளருமான ரதிமீனா சேகர் மற்றும் தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோ டை ராமர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி ஆய்வு செய்தனர்.

    கூடலூர் நகர் கழக செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கம்பம் ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ஆர். ஈஸ்வரன்,மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சோலைராஜ்,மாவட்ட விவசாய அணி செயலாளர் பால்பாண்டியன், கே.கே.பட்டி பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    No comments