நாகை அருகே தேவூர் அருள்மிகு முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் பூச்சொரிதல் நிகழ்ச்சி..... பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டு ஏந்தி வந்து மனமுருகி வழிபாடு.....


நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பங்குனி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். 20 நாட்கள் நடைப்பெறும் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று   பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது.

 கடுவை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க 100 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கலந்துக் கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவில் அம்பாள் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது.




Post a Comment

0 Comments