• Breaking News

    பாவூர்சத்திரத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்..... முன்னாள் மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்....


    பாவூர்சத்திரத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.

    கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சீனித்துரை தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தனர். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்ப்பூசணி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி தலைவர் இளங்கோ, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், அறங்காவலர்குழு உறுப்பினர் காலசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, ஒன்றிய பொருளாளர் வினைதீர்த்தான், மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி, முன்னாள் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கபில்தேவதாஸ், நிர்வாகிகள் காந்திராமன், ஜான்நியூட்டன், முத்துபாண்டி, டேனியல், வைத்திலிங்கராஜா, மாரிமுத்து, முருகன்,  கிருஷ்ணமூர்த்தி, ரிக்கி கணேசன், பூதத்தான், மயிலப்பபுரம் செல்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    No comments