தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு,புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், OKS சதீஷ் அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில், ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் 600 மகளிரை ஒருங்கிணைத்து ,மாபெரும் கோலம் போட்டி சிறப்பாக நடத்தினார். கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 23/3/25 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.அரவிந்த் ரமேஷ் , தலைமை பொதுக்குழு உறுப்பினர் மேடவாக்கம் ப. ரவி , புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் S.சங்கீதா பாரதிராஜன் , ஒன்றிய செயலாளர் G. வெங்கடேசன், சித்தாலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் S.ரவி , மாவட்ட பிரதிநிதி R.சொக்கலிங்கம் , ஒன்றிய துணை செயலாளர் H.D. போஸ் ,ஒன்றிய கவுன்சிலர் கல்பனா சுரேஷ், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் D.S. பாரதிராஜன் , மாவட்ட, ஒன்றிய அணியின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள்,கழக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 Comments