தென்காசி நல்லமணி யாதவா கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்..... மாவட்ட ஆட்சியர் தகவல்
தென்காசி நல்லமணி யாதவா கல்லூரியில் மார்ச் 8ந்தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இணைந்து தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தென்காசி கொடிக்குறிச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற மார்ச் 8ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி வரை மேலும் பி.இ, டிப்ளமோ, நர்சிங், ஐடிஐ படித்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments