ஹிந்தி படித்தவர்கள் எங்க வீட்டில் மாடு மேய்க்கிறார்கள்..... அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆணவ பேச்சு

 


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கூறியதாவது, தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்தவர் பேரறிஞர் அண்ணா. பல்வேறு நாடுகளில் தமிழும் ஆங்கிலமும் படித்தவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்.

ஹிந்தி படித்தவர்கள் எங்கே இருக்கிறான் தெரியுமா? ஹிந்தி படித்தவர்கள் எல்லாம் எங்கள் வீட்டில் மாடு மேய்க்கிறார்கள். நான் பொய் சொல்லவில்லை. உண்மையில் மாடு தான் மேய்க்கிறார்கள். இந்தி படித்தவர்கள் பாணி பூரியும், குளத்து வேலையும் செய்து வருகின்றனர். ஹிந்தி படித்தால் நாமும் வடநாட்டிற்கு சென்று பானிபூரி தான் விற்க வேண்டும் என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments