நாகை அருகே குருமணாங்குடியில் ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் அமர்க்களமாய் நடைப்பெற்ற அரசு பள்ளி ஆண்டு விழா


நாகப்பட்டினம் மாவட்டம் குருமணாங்குடியில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகளை கடந்து செயல்படும் இப்பள்ளியின் ஆண்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் கலைத் திருவிழாவில் மாநில, மாவட்ட அளவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. 

அதே போன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பள்ளியின் முன்னாள்  மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் சினிமா பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு வண்ணமிகு ஆடைகள் உடுத்தி நடனமாடி அசத்தினர். கரகாட்டம், பரதநாட்டியம், காவடியாட்டம், அம்மன் ஆட்டம், தண்ணீர் விழிப்புணர்வு நாடகம்   உள்ளிட்ட பல்சுவை கலை நிகழ்ச்சியாக மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது காண்போரை பரவசமாக்கியது. 

அரசு பள்ளி ஆண்டுவிழாவில் மாணவர்களின் அசத்தலான நடனங்களை பொது மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் சிவக்குமார், தலைமையாசிரியர் சந்திரா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி திராவிட செல்வி, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாஸ்கர், சதிஷ், பேசில் ஜேசுராஜ் , சம்பத்குமார், ஜாக்குலின், சௌமியா மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments