• Breaking News

    விசிகவின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மற்றும் மகளிர் மாநாடு குறித்து செயற்குழு கூட்டம்


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மகளிர் மாநாடு சம்பந்தமாக ஈரோடு மேற்கு மாவட்ட விசிக செயற்குழு கூட்டம் சத்தியமங்கலம் ஆனை கொம்பு அரங்கத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் மிசா.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

    பவானிசாகர் தொகுதிச் செயலாளர் பொன்.தம்பிராஜன் வரவேற்புரையாற்றினார்.மேலும் இக்கூட்டத்தில் நில உரிமை மீட்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் புளியம்பட்டி அ.சாமிநாதன், கல்வி,பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் அ.ரமேஷ்வளவன் , கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் வீர.துரைசாமி , வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் கோபால்சாமி , தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் திருமாமுனியப்பா, இசுலாமிய சனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் அப்துல்லா , சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆ.கு.சுப்பிரமணியம் , சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் திருமாபிரபு , பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயன் , கோபி ஒன்றிய செயலாளர் துரை.ஆறுமுகம் , தூ.நா.பாளையம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ் ,நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் , நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி , நம்பியூர் நகர செயலாளர் பட்டாசு மூர்த்தி , கோபி நகர செயலாளர்  மாணிக்கம், சத்தியமங்கலம் நகர ஒருங்கிணைப்பாளர் சிறுத்தை சுப்பிரமணியன், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை மதன், அரியப்பம்பாளையம் பேரூர் செயலாளர்  ஈஸ்வரன் , கோபி நகர துணை செயலாளர் ரேவதி , கோபி நகரம் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    வரும் மார்ச் மாதம் 29- ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா மகளிர் மாநாட்டில் விசிக தலைவர் தொல் ‌.திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார். மாநாடு சம்பந்தமாக மகளிர் விடுதலை இயக்கம் மாநில துணை செயலாளர் தில்லைகரசி , கோபி தொகுதி செயலாளர் கஸ்தூரி தேவி , மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் குரைஷ் பாத்திமா ஆகியோர் மாநாடு குறித்து விளக்கவுரை ஆற்றினார்கள்.

     இக்கூட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, பேரூர், துணை நிலை அமைப்புக்களின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் சத்தியமங்கலம் நகர செயலாளர் சிறுத்தை சிவா நன்றியுரையாற்றினார்.

     மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471, 6382211592 .

    No comments