செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ரயில்வே கேட் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த ரயில்வே கேட்டில் சாலை குண்டும் குழியும் மாக இருப்பதால் இப்பகுதியில் அத்தியவாசிய பொருள் வாங்க பணிக்கு செல்லவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாகனத்திலும் நடைபயணமாகவும் பயணம் செய்கிறார்கள் இடத்தில் சரிவர கேட்ட கடக்க முடியாமல் விபத்துக்கள் நடப்பதாகவும் கை கால் அடிபட்டு எலும்பு முறிவு பெண்கள் கர்ப்பிணி பெண்கள் என விபத்துக்குள் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த ரயில்வே கேட்பகுதியில் இருப்பதால் வாகன தடுமாறி விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு மற்றும் பல்வேறு விபத்துக்கள் தினசரி நடைபெற்று வருவதாகவும் ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் ரயில்வே நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதால் பாட்டாளி மக்கள் கட்சியின் மறைமலைநகர் நகர செயலாளர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வன்னியர் சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருக்கச்சூர் ஆறுமுகம் மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை மறைமலைநகர் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக ரயில்வே கேட்டு அமைந்துள்ள இடத்தில் பொதுமக்கள் ரயில்வே கேட்டை பொதுமக்கள் எளிய முறையில் கடக்க விபத்து ஏற்படாத வண்ணம் சரி செய்ய வேண்டும் எனவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறைமலை ரயில்வே நிர்வகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சண்முகம், மாவட்ட பசுமைத்தாயக செயலாளர் செந்தில் நாத் கமலக்கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர் காயரம்பேடு தேவராஜ் , பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் செல்வி கிருஷ்ணமூர்த்தி, மறைமலைநகர் நகர செயலாளர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறைமலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன கோஷங்களை எழுப்பி பின்னர் காட்டாங்குளத்தூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைத்து தரக் கூறியும் கேட் என் l g 45 சாமியார் கேட்டு அப்பகுதியிலும் மேம்பாலம் அமைத்தரக்கோரியம் lg 46 மாமரத்துக்கு கேட் என் எல் ஜி 48 திருத்தேரி கேட் மேம்பாலம் தரக்கூறியும் கோரிக்கை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments