இசைஞானி இளையராஜா தன்னுடைய முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு இன்று சென்னை திரும்பியுள்ளார் . இவருக்கு தமிழக அரசின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தார்கள். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து வரவேற்றார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளையராஜா, “லண்டனை தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். நம் மண்ணிலும் நடக்கும், அதுவரை காத்திருங்கள். 82 வயசாயிடுச்சு இனிமே என்ன போகிறார் என்று நினைத்து விடாதீர்கள். இதுதான் ஆரம்பம். என்னை இசை கடவுள் என்றெல்லாம் ரசிகர் சொல்வது கேட்கும்போது இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களேப்பா என்று தான் என்று எனக்கு தோன்றும். நான் சாதாரண மனிதனைப் போலத்தான் வேலை செய்கிறேன். என்னைப் பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது” என்று கூறியுள்ளார்.
0 Comments