இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட பாம்புகள், ஆமைகள் மதுரை விமானநிலையத்தில் பறிமுதல்..... ஒருவர் கைது
வேலூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர் கொண்டு வந்த பைகளை சோதனை இட்டனர். அப்போது அதில் 52 ஆமைகள், 8 பாம்புகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்தவர் என்பதும், இலங்கையில் இருந்து ஆமைகள், பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்து ஆமைகள், பாம்புகள் மற்றும் பள்ளிகளை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்தனர்.
No comments