• Breaking News

    எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அவமானம் தேவையா..? அதிமுக மாஜி எம்பி தாக்கு

     


    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக தற்போதே பேச்சுக்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் கடந்த 8 வருடமாக திமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது. அதே நேரத்தில் எதிர் அணியில் உள்ள கட்சிகள் தனித்து தனித்து தேர்தலை எதிர்கொள்வதால் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து தோல்வியே ஏற்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்தது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக மற்றும் பாமக தனி அணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தோல்வியே கிடைத்தது. திமுக கூட்டணி 40 இடங்களையும் அள்ளியது. இருந்த போதும் இனி பாஜகவிடம் எப்போதும் கூட்டணி இல்லையென எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

    தற்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யை தங்கள் அணிக்கு இழுக்க திட்டமிட்டார். ஆனால் விஜய் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பாக திமுக மட்டுமே தங்கள் எதிரி எனவும் எனவே மற்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைப்போம் என தெரிவித்தார். எனவே பாஜகவுடன் கூட்டணி செல்லும் என அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள். 

    இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமல், பாஜக ஒரு நோட்டா கட்சி, கூட்டணி இல்லையென தெரிவித்தவர்கள் தற்போது எங்கள் கட்சியோடு கூட்டணி அமைக்க தவம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இது தொடர்பாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எடப்பாடி பழனிசாமிக்கு இந்த   அவமானம் தேவையா? பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லவா, வேலுமணி வைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவது, பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு "திமுக மட்டுமே எதிரி 6 மாதம் கழித்து கூட்டணி குறித்து சொல்கிறேன்" என்பது போன்ற சமிக்கைகளால் சிறுபான்மையினர் நம்பிக்கையை இழந்து, பாஜகவுடனும் உறவு சரியில்லாமல் இருபுறமும் வாய்ப்பிழந்து நிற்கிறீர்கள். இது உங்களுக்கு தேவையா? ஏன் இந்த குழப்பம்? பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருந்து இந்த இயக்கத்தை ஒன்றிணைக்க வேண்டியது தானே.  வலிமையான அதிமுகவை கட்டமைத்து ஆட்சி அமைகிற வழியை பாருங்கள் என கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    No comments