ஆஸ்திரேலியாவில் நடிகை சமந்தாவை கதறவிட்ட ரசிகர்கள்

 


நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பின்பு நாக சைதன்யா சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருக்கிறார். இதற்கிடையில் சமந்தா மையோ சிட்டிஸ் எனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதன் பிறகு நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் பிஸியாக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் சிட்டாடல் ஹனி பனி என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மும்பையில் தான் செட்டில் ஆகி இருக்கிறார் சமந்தா.  இதற்கிடையில் சமந்தா இயக்குனர்  நந்தினி ரெட்டி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சமந்தா தன்னுடைய திரிலாலா மூவி பிக்சர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார்.

தற்போது பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்றா.ர் அப்போது அங்கு குவிந்திருந்த இந்திய வம்சா வழியினர் உற்சாகத்தோடு சமந்தாவுடன்  கை குலுக்க விரும்பினர். அதில் ஒருவர் கையை பிடித்து இழுத்ததால் சமந்தா அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு பேசிய சமந்தா ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பியதாகவும், ஆனால் அது நடக்காமல் போனதாகவும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments