நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பாலக்குறிச்சி வயல்வெளி அருகே உள்ள வாய்க்காலின் முட்புதரில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் எலும்பு கூடாக கடந்துள்ளது. அப்பகுதியில் ஆடு,மாடு மேய்க்க சென்றவர்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சடலத்தை பார்வையிட்டனர். சடலம் அழுகி எழும்பு கூடாக கிடப்பதால் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முடியாத சூழலில் சம்பவ இடத்திலே மருத்துவர்கள் உடல் கூறாய்வு மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியாத சூழ்நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சடலத்தின் அருகே பெண்ணின் செருப்பும் கழுத்தில் செப மாலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாகை அருகே வாய்க்கால் புதரில் பெண்ணின் சடலம் அழுகி எழும்பு கூடாக கிடப்பது அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் ஜி.சக்ரவர்த்தி
0 Comments