செங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரத்தில் தாம்பரத்தில் மனிதநேய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழச்சி மாநில செயலாளர் எம்.முஜிபுர் ரஹ்மான் தலைமையில்நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலிங் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் எம்சி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்கள்.
மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜெயினுலாபுதீன்,தாம்பரம் வழக்கறிஞர் சங்கம் தலைவர் ஸ்ரீராம்,தாம்பரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.அர்ச்சுனன்,பல்லாவரம் பார் அசோசியேஷன் தலைவர் ஆர்.மணிமாறன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் வழக்கறிஞர் எம்.பாதுஷா அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.
0 Comments