• Breaking News

    ஈரோடு: தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

     


    ஈரோடு மாவட்டம் ,  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதற்கு முன்னதாக தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன்பண்ணாரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.அதனைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிகப்படியில் சேர்ப்பது குறித்தும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது புதிய உறுப்பினர் மற்றும்நிர்வாகிகளுக்கு நியமன கடிதமும் கூட்டத்தில் வழங்கப்பட்டது.கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட தலைவர் வெ.தங்கவேல் தலைமை தாங்கினார் மாநிலத் தலைவர்  சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

    மேலும் இக்கூட்டத்திற்கு மாநிலத் வர்த்தக அணி செயலாளர் ர.சிவகுமார்   கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் பொதுச் செயலாளர் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .

    No comments