பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

 


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று 25 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய திருடனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து இன்றும் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மகாராஜா.

இவர் மீது ஆதம்பாக்கம் அருகே பிரபல நகைகளை உரிமையாளரை கடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கு பதிவாகியுள்ளது. இவரை கிண்டி அருகே போலீசார் பிடிப்பதற்காக சென்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது போலீசார் அவரை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். மேலும் இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Post a Comment

0 Comments