தென்காசி: புளியரையில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடியை தராமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (29.03.2025) தென்காசி மாவட்டம் புளியரை பிரதான சந்திப்பில் நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முத்துபாண்டி தலைமையில்,புதூர் பேரூராட்சி தலைவரும் செங்கோட்டை நகர திமுக ஒன்றிய செயலாளருமான ஆ. ரவிசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
No comments