• Breaking News

    இனப் பகைவர்களுடன் கூட்டணி..... செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்

     


    அதிமுக கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே விரிசல் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவினை முதலில் புறக்கணித்த செங்கோட்டை அதன் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் புறக்கணித்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்கு செல்லாமல் செங்கோட்டையன் சபாநாயகர் அறைக்கு சென்று அமர்ந்தார். இது பற்றி அவரிடம் கேட்டபோது தொகுதி பிரச்சனை தொடர்பாக சபாநாயகரை சந்தித்ததாக கூறினார்.

    இது பற்றிய எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டபோது செங்கோட்டையனிடமே என்ன பிரச்சனை என்று கேளுங்கள் சொல்லுவார் என்று கூறிவிட்டார். அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் செங்கோட்டையன் இப்படி பொதுவெளியில் நடந்து கொள்வது அநாகரிகமானது என்றார். இதன் காரணமாக அதிமுகவில் இருந்து அவர் விலகுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதாவது சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் இணைய நிறுவன விழாவில் செங்கோட்டையன் மற்றும் சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் திராவிட இயக்கத்தால் 50 ஆண்டுகளாக பதவியும் பலனும் பெற்று இனப் பகைவர்களுடன் தற்போது கூட்டணி அமைக்கும் செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் ஒட்டியவர்களின் பெயர்களும் அதில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    No comments