உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் கொலையில் திடீர் திருப்பம்.....
![]() |
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்துவிட்டு கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டிற்கு சென்றபோது, முத்தையன்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்த சென்றுள்ளார். அங்கு கஞ்சா வழக்கில் ஜாமினில் வெளிவந்த பொன்வண்டு என்பவர் அவரது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
முத்துக்குமாரும், பொன்வண்டுடன் சேர்ந்து குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பொன்வண்டுக்கு, முத்துக்குமார் அறிவுரை வழங்கியுள்ளார். இதை கேட்டுக் கொண்டிருந்த பொன்வண்டுவின் நண்பர்கள் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், முத்துக்குமாரை அனைவரும் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினார். இதில் முத்துக்குமார் நிலைக்குலைந்து கீழே விழ, அருகில் இருந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கொன்றுள்ளனர்.
மேலும் இது சம்பவத்தின் போது சண்டையை விலக்க சென்ற முத்துக்குமாரின் உறவினரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ராஜாராமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு உயிரிழந்த முத்துக்குமாரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
No comments