பெருந்தலையூர் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி, கோபி வடக்கு ஒன்றியம், பெருந்தலையூர் ஊராட்சி இந்திராநகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் திட்டத்தின் கீழ் 14 இலட்சத்து 31ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அரசின் சார்பில் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிந்திரன் , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி ,ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணன் , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் , ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெகநாதன் , ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரோகித் , சிறுபான்மை துணை அமைப்பாளர் மகேஷ், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் யேசுதாஸ் , அருண் , பொன்னுசாமி, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments