• Breaking News

    முதல்வர் பிறந்த தினத்தையொட்டி ஆலங்குளம் நூலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்


    முதல்வர் பிறந்த தினத்தையொட்டி ஆலங்குளம் நூலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.

    திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி ஆலங்குளம் அரசு பொது நூலகத்திற்கு குடிநீர் சுத்திரகரிப்பு இயந்திரம் (ஆர்.ஓ.வாட்டர் மிஷின்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  வாசகர் வட்ட தலைவரும், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவருமான தங்க செல்வம் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், குறிப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.நூலகர் பழனீஸ்வரன் வரவேற்று பேசினார்.

    முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திரகரிப்பு இயந்திரம் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், கீழப்பாவூர் பேரூர்  செயலாளர் ஜெகதீசன்,  மாவட்ட பிரதிநிதி  அன்பழகன், காங்கிரஸ் நிர்வாகி இயேசு ராஜா, ஆலங்குளம் பேரூர்  பொருளாளர் சுதந்திரரராஜன், இளைஞரணி அரவிந்த் ராஜ் திலக், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்  அசோக், மாணவரணி தினேஷ் பாண்டியன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பொன் மோகன்ராஜ், கிளை செயலாளர் காசிப் பாண்டியன்,அருணாசலம், அருணா பாண்டியன்,சிவா உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர். முடிவில் சோனா மகேஷ் நன்றி கூறினார்.

    No comments