சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முதலில் வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது. இதனால் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அதன்பிறகு தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து இடையே அரை இறுதி போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இறுதி போட்டி நடைபெறுகிறது.
இரு அணிகளிலும் வீரர்கள் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் நல்ல நிலையில் இருப்பதால் கண்டிப்பாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் 25 வருடங்களுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் மோதுகிறது. கடந்த 2000ம் ஆண்டு ஐசிசி நாக் அவுட் டிராபியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த 25 வருட தோல்வி கணக்கிற்கு இந்திய அணி இந்த முறை பழி தீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் இன்று மதியம் 1.30 மணிக்கு துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments