அயோத்தியில் குண்டு வைக்க திட்டம்..... பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாதி கைது
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ராமர் கோவில் திறக்கப்பட்டது. பலகட்ட பிரச்சினைகளுக்கு பிறகு அயோத்தி ராமர் கோவிலை மத்திய பாஜக அரசு கட்டி முடித்து கடந்த வருடம் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகத்தை நடத்தியது.
இந்நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது. இவர் மில்கிபூர் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு இருக்கிறது. இவர் ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகளுடன் ரகசியமாக தொடர்பில் இருந்துள்ளார்.
இவர் சம்பவநாளில் பரிதாபாத் பகுதிக்கு ரயிலில் வந்த நிலையில் இரண்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தார். அதாவது அவரிடம் ஒருவர் இரண்டு கையெறி குண்டுகளை கொடுத்த நிலையில், அதனை அப்துல் தான் வசித்த பகுதிக்கு அருகே உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளார். இதனை அயோத்திக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக மத்திய புலனாய்வுத் துறை அமைப்பினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அயோத்தியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டினரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
No comments