பிறந்தநாள் இறந்த நாளாக மாறியது..... வாலிபரை கொன்ற காதலியின் தந்தை

 


தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் தனது மகளை காதலித்த இளைஞரை தந்தை  கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்த சாய் குமார் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால், அந்த பெண்ணின் தந்தை முத்யம் சரய்யா, இவர்களது காதலுக்கு கடுமையாக எதிர்த்து வந்தார். சாய் குமார் தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, சரய்யா திடீரென வந்து சாய் குமாரை கொலை செய்துள்ளார்.சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, “கேக் வெட்டிக்கொண்டிருந்த போது சரய்யா திடீரென ஆளில்லா இடத்தில் வைத்து சாய் குமாரை வெட்டினார். சாய் ஓட முயன்ற போதும், சரய்யா அவரை அரிவாளால் கடுமையாக தாக்கினார்” என தெரிவித்தனர்.

 காயம் அடைந்த சாயை நண்பர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சாயின் தந்தை பரசுராமுலு, “நாங்கள் முன்பே காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால், போலீசார் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆலோசனை நடத்தியிருந்தால் என் மகன் இப்போது உயிருடன் இருந்திருப்பார்,” என்றார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் கிராமத்தில் பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments