கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தந்த இயக்குநர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

 


கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் 2025 மகா கும்பமேளாவின் போது வைரலான இளம் பெண் மோனலிசாவுக்கு இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தி டைரி ஆஃப் மணிப்பூர் படத்தில் நடிக்க, அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வழங்கியதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார். காந்திகிரி, ராம் கி ஜென்மபூமி, லஃபாங்கே நவாப், தர்ம் கே சவுதாகர் மற்றும் காஷி டு காஷ்மீர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள சனோஜ் மிஸ்ரா தற்போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

2020 ஆம் ஆண்டு ஜான்சியில் வசிக்கும் போது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சனோஜ் மிஸ்ராவுடன் முதன்முதலில் தொடர்பு கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில், அவர்கள் இருவரும் அடிக்கடி தொலைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்ததாகவும், ஜூன் 17, 2021 அன்று, மிஸ்ரா ஜான்சி ரயில் நிலையத்தில் இருப்பதாகக் கூறி தன்னை அழைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார். நான் அவரை சந்திக்க மறுத்தபோது, ​​நீ வரவில்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வதாக சனோஜ் மிஸ்ரா மிரட்டியுள்ளார். 

அவரது மிரட்டல்களுக்கு பயந்து, பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார்.ஜூன் 18, 2021 அன்று, மிஸ்ரா தன்னை ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு போதைப் பொருளைக் கொடுத்துத் தாக்கியதாக புகாரில் கூறியுள்ள பாதிக்கப்பட்ட பெண், மயக்க நிலையில் இருந்தபோது ஆபாசமாக  வீடியோ எடுத்து அவற்றை வெளியிடுவதாக மிரட்டினார் என்றும் கூறியுள்ளார். திருமண வாக்குறுதிகளை அளித்தும், படங்களில் வாய்ப்பு தருவதாகவும் தன்னை ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறிய புகாரின் பேரில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments