நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக வீரப்பனின் மகள் நியமனம்

 


நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக ஏராளமான நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் விலகினர்.

 கடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில் இது பற்றி சீமானிடம் கேட்டால் எங்கள் கட்சிக்கு களை உதிர் காலம் என்கிறார். சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாகவே கட்சியிலிருந்து விலகுவதாக நிர்வாகிகள் கூறும் நிலையில் அவர்கள் மாற்றுக் கட்சியிலும் இணைந்து வருகிறார்கள்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் தற்போது வீரப்பனின் மகள் வித்யா ராணியை இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக சீமான் நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதாவது சந்தன கடத்தல் வீரப்பன் மறைந்த நிலையில் அவருடைய மகள் வித்யா ராணி தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 

கடந்த வருடம் நாடாளுமன்ற தேர்தலின் போது வித்யா ராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். அப்போது அவரை கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களம் இறக்கி இருந்தது. மேலும் இந்த நிலையில் தற்போது அவருக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பை சீமான் வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments