எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம்..... பிரதமர் மோடி
உலக தண்ணீர் தினத்தைக் குறிக்கும் வகையில், தண்ணீரைப் பாதுகாப்பதற்கும் நிலையான வர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
"தண்ணீர் நாகரிகங்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. எனவே எதிர்கால சந்ததியினருக்கு அதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது" என்று அவர் தனது தளத்தில் கூறினார்.
நன்னீரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் உலக தண்ணீர் தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
No comments