முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு டி.எஸ்.ராமர் மாணவர் விடுதியில் ( லக்ஷ்மண ஐயர் ஹாஸ்டல்) உள்ள சமையல் கூடத்திற்கு தேவையான சமையல் உபகரணங்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு,பிஸ்கட் ஆகியவை (மொத்த மதிப்பு ரூ.9500/-) கோபிசெட்டிபாளையம் நகர திமுக செயலாளரும் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.திருவேங்கடம், துணை அமைப்பாளர்கள் கே.ஜி.வினோத்குமார், வி.வைத்தீஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி , தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.வெ. குமணன் , மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கேகே.செல்வம் மற்றும் மாவட்ட,நகர,வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் நகர இளைஞர் அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செ.கார்த்திகேயன் சிறப்பாக செய்திருந்தார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592 .
No comments