• Breaking News

    என் ஜாடையில் இல்லை..... குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை.... கதறும் தாய்


     ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிசெல்வி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. மகளுக்கு தீபா ஸ்ரீ, மகனுக்கு திவான் என பெயர் வைத்தனர். கடந்த 15-ஆம் தேதி பாண்டி செல்வி பெண் குழந்தை தீபாஸ்ரீயை கணவரிடம் விட்டுவிட்டு, உடம்பு சரியில்லாத திவானை மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்.

     அன்றைய தினமே குமார் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தீபாஸ்ரீக்கு திடீரென மூச்சு பேச்சு இல்லை. மயங்கி விழுந்துவிட்டார்.இதனால் எழுமாத்தூர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றேன். அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி செல்லுமாறு கூறுகிறார்கள் என தெரிவித்தார். இதனால் பதறி போன பாண்டிச்செல்வி தனது மகளை மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். 

    அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் கூறியதாவது இரட்டை குழந்தை பிறந்ததிலிருந்து எங்கள் வீட்டில் பிரச்சனை. அந்த குழந்தைகள் என் ஜாடையில் இல்லை. இதனால் எனக்கும் என் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று தீபா ஸ்ரீ அழுது கொண்டே இருந்தார். 

    யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோபத்தில் குழந்தையின் தலையை பலமுறை சுவரில் அடித்தேன். பின்னர் குழந்தை இறந்த உண்மையை மறைக்க மனைவியிடம் பொய் சொல்லி வரவழைத்தேன் என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments