• Breaking News

    நாகை: தேசிய பசுமை படை பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது

     


    மத்திய மாநில அரசுகளின், சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் துறையின்  சார்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் தேசிய பசுமை படை பள்ளிகளுக்கு இரண்டாம் கட்டமாக தலா ரூபாய் 2500 விதம் 65 பள்ளிகளுக்கு, நாகூர் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காசோலை வழங்கப்பட்டது. 

    2024 25ல் தோட்டம் அமைத்தல், மரங்கள் நடுதல், மாணவர்களுக்கு போட்டிகள் , கருத்தரங்கு, பேரணி நடத்துதல் போன்ற பசுமை செயல்பாடுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா. முத்தமிழ் ஆனந்தன் இதற்கான காசோலையை பள்ளிகளுக்கு வழங்கினார். மத்திய மாநில அரசுகளின் சார்பில் இதுவரை 130 பள்ளிகளுக்கு பசுமை செயல்பாடுகளுக்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    No comments