தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்
நாகை மாவட்டம் நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகம் 34.30 கோடி ரூபாய் செலவில் படகு இறங்குதளம், படகு அணையும் சுவர். தெற்கு மற்றும் வடக்கு பக்க அலைதடுப்புச் சுவர்கள். முகத்துவாராம் ஆழப்படுத்துதல், தடுப்புச் சுவர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு 9.3.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும், நம்பியார் நகர் சிறிய மீன்பிடித் துறைமுகத்தில் 700 மீட்டர் கடல் அரிமானம் ஏற்பட்டுள்ளதை தடுப்பதற்காக கூடுதலாக 4 நேர்கல் சுவர் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 8 முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்தில் மீனவப் பெருமக்களை முதலமைச்சர் இன்றையதினம் சந்தித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சுனாமி குடியிருப்புகளை சீர்செய்து தர வேண்டும் என்றும், வங்கி கடனுதவிகளை தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அப்போது, முதலமைச்சர் . மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், நம்பியார் நகரிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி சிறுவர். சிறுமியர்கள் அளித்த உற்சாக வரவேற்பினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, அச்சிறுவர், சிறுமியர்களுடன் உரையாடினார்.
இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் தலைவர் ந.கௌதமன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments