மார்த்தாண்டம் முந்திரி ஆலை முன் திடீர் முற்றுகை போராட்டம்
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிற்சாலை உள்ளது. தற்போது அந்த இடத்தில் மத கூடம் (ஜெபக்கூடமாக மாற்ற சிலர் முயற்சி செய்தனர்.
இந்த செய்தியை அறிந்த, கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி பொதுச் செயலாளர் செல்வின், கட்சி நிர்வாகிகள் முகுந்தன், வினுக்குமார், செந்தில் குமார்,தனுஷ் மற்றும் ஊர் பொதுமக்களும் சேர்ந்து திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஜெபக்கூட்டம் நடந்த முயன்றவர்களை கலைந்து போக கூறியதுடன் மட்டுமல்லாமல், இந்த இடத்தில் இனி ஜெபக்கூட்டம் நடத்த மாட்டோம் என எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது. அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
No comments