மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கைது
கடலூர் மாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி குப்பம், பெத்தான் குப்பம், கொடுக்கம்பாளையம் உள்ளிட்ட 4 கிராமங்களில் 160 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தனியார் தோல் தொழிற்சாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சண்முகம் உள்ளிட்ட கட்சியினர், விவசாய அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
No comments