தென்காசி மேலமுத்தாரம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி மேலமுத்தாரம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசியில் அமைந்துள்ள மேலமுத்தாரம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா 16 நாட்கள் நடைபெறும். முதல் நாள் விழாவையொட்டி வெள்ளிகிழமை காலை கொடியேற்று விழா நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனையும், அதைத் தொடர்ந்து, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு தீபாராதனை, சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா வருதல் நடைபெற்றது.
நாள்தோறும் ஒவ் வொரு மண்டகப்படிதாரர்கள் சார் பில் அபிஷேகம், தீபாராதனை, வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு பால்குடம், வீதி உலாவும், 12 மணிக்கு அபிஷேகம் தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு காகம் புறப்படுதல், நள்ளிரவு 1 மணிக்கு பூத வாகனத்தில் அம்பாள் எழுந்தருல், 2 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் திரௌபதி அம்மன் எழுந்தருளல் நடைபெறுகிறது. 31ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பூக்குழி திருவிழா நடைபெறுகிறது.
கொடியேற்ற விழாவில், முன்னான் நகர்மன்றத் தலைவர் கோமதிநாயகம், செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கர், அறங்கா வலர்கள் முருகேசன், பாக்கியம்மற்றும் மோகன்ராஜ், முன்னாள் அறங்காவலர்கள் சங்கர்ராஜா, சாமி ஆசாரி, குமார், கோபி, முருகன், ராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments