கும்மிடிப்பூண்டி: சட்ட மாமேதை அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு எஸ்ஜிஎம் பிரண்ட்ஸ் சார்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியை துவக்கி வைத்தார் திமுக மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ்


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சேகண்ணியத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு எஸ் ஜி எம் பிரண்ட்ஸ் சார்பில் 3 ம் ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களை வாழ்த்தி போட்டியை துவக்கி வைத்தார். 

இதில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் ,பொன்னேரி நகர இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் மா தீபன், மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், பள்ளிபாளையம் கிளைச் செயலாளர் முனிவேல்,வழக்கறிஞர்கள் ராஜசேகர்,தமிழ் மாறன் ரஞ்சித் குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி ஊராட்சி கிளை செயலாளர் குமார் சேகர் தட்சிணாமூர்த்தி வேலு சுரேஷ் ரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments