இன்ஸ்டா காதலியை பார்க்க வீட்டுக்கு சென்ற காதலன்..... கையும் களவுமாக பிடித்து திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்.....


 குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீப். இவருக்கும் உத்தரபிரதேச மாநிலம் ஜலாவின் பகுதியை சேர்ந்த சாமா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் காதலியை பார்ப்பதற்காக காதலியின் சொந்த ஊரான ஜாலாவின் பகுதிக்கு பிரதீப் சென்றார். இதன் பின்னர் காதலியின் வீட்டுக்கு சென்ற பிரதீப், சாமாவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சாமாவின் வீட்டார், இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து, பெண் வீட்டார் உடனடியாக அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இன்ஸ்டாகிராமில் பழக்கமான காதலியை பார்ப்பதற்காக காதலியின் வீட்டுக்கு காதலன் சென்ற நிலையில், இருவருக்கும் பெண் வீட்டார் திருமணம் செய்துவைத்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

Post a Comment

0 Comments