மயிலாடுதுறை: பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் பலி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அரசு கல்லூரியில் செல்வம்(21) என்பவர் படித்து வந்துள்ளார். இவரது நெருங்கிய நண்பர் புவனேஷ்(21). இருவரும் பிபிஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் செல்வமும் புவனேஷும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வமும், புவனேஷும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments