எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழா..... ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்..... போலீஸ் குவிப்பு
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் நான்கு முனை சந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலை சாலை விரிவாக்க பணிகள் காரணமாக அகற்றப்பட்டது. இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு அருகிலேயே புதிய சிலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் எம்ஜிஆர் சிலையை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஓம் சக்தி சேகர் என்பவர் மீண்டும் திறக்க வந்திருந்தார்.
ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் சிலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணியை சேர்ந்த அன்பழகன் தலைமையில் கோஷம் எழுப்பப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் வில்லியனூர் நான்கு முனை சந்திப்பில் குவிந்திருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments